கண்டி கன்னொருவையைச் சேர்ந்த பௌத்த தேரர்கள் தனது பக்தர்கள் சகிதம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்கள்.
மட்டக்களப்பில் உள்ள பேரின்பஞான பீடத்தில் சுவாமி ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி புண்ணியரெத்னம் குருக்களை சந்தித்து பரஸ்பரம் பக்தர்களோடு கலந்துரையாடி இறுதியில் அன்னதானத்திலும் பங்குகொண்டு விடை பெற்றார்கள்.
மட்டக்களப்பு ஶ்ரீ பேரின்ப ஞான பீடத்திற்கு கண்ணொருவ ரஜமகா விகாரை விகாராதிபதி வணக்கத்திற்குரிய அம்பன்பொல ஶ்ரீ சுமங்கல தேரர் பக்தர்கள் சகிதமாக விஜயம் மேற்கொண்டு பீடத்தின் குரு முதல்வர் ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி K.S.புண்ணியரெத்தினம் சுவாமிகளை சந்தித்து இறை பிரார்த்தனை ஜெப தியான வழிபாடுகளில் ஈடுபட்டு விடை பெற்று சென்றார்கள்.
சந்திப்பின் போது பௌத்த இந்து மத சமய கலாசார பாரம்பரியங்கள் பற்றியும் வணக்க வழிபாடுகள் பற்றியும் பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பௌத்த தேரரும் பக்தர்களும் மட்டக்களப்பு விஜயம் தொடர்பாக பரிபூரண திருப்தியும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தார்கள்.
0 comments :
Post a Comment