சாயந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழகத்தின் "மர்ஹும் எப்.எம். றஜாத் ஞாபகார்த்த கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் -2022"போட்டியில் சாயந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழகத்தினர் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.
அட்டாளைச்சேனை பொது மைானத்தில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அட்டாளைச்சேனை பிரண்ஸ் விளையாட்டுக்கழகத்துடன் இடம்பெற்ற போட்டியில் சாயந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழகத்தினர் வெற்றி பெற்றனர்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்படுத்தாடிய சாயந்தமருது மியன்டாட் விளையாட்டுக்கழகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டத்தை பெற்றது.
பதிலடித்தாடிய அட்டாளைச்சேனை பிரண்ஸ் விளையாட்டுக்கழகம் 15 ஓவர்கள் முடிவில் 04 வது பந்துடன் சகல விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டத்தை பெற்றது.
இதனடிப்படையில் சாயந்தமருது மியன்டாட் விளையாட்டுக்கழகத்தினர் மர்ஹும் எப்.எம்.றஜாத் ஞாபகார்த்த கிரிக்கெட் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக மியண்டாட் விளையாட்டுக்கழகத்தின் யூ.எல்.எம்.ஆசிக் தெரிவானார்.
மேலும் இவருக்காக மியன்டாட் கழகத்தின் ஒழுக்காற்று சபை தலைவர் ஏ.ஹலீம் அவர்களினால் சிறு தொகை பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
சாயந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் யு.கே.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மியன்டாட் கழகத்தின் தவிசாளர் ஜே.எம்.காலித்,உப தலைவர் யூ.எல்.எம்.பாஹிம்,ஆலோசனை சபைத் தலைவர் எஸ்.எம்.அமீர், தெரிவுக் குழு தலைவர் எம்.ஏ.ஜனூஸர், உயர் பீட உறுப்பினர் ஏ.எம்.ஜஹான், முகாமையார் யூ.எல் பரீட், மர்ஹும் றஜாத் அவர்களின் தந்தை யூ.எல் பாரூக் மற்றும் பிரண்ஸ் விளையாட்டுக்கழக தலைவர் பி.எம்.றிம்ஸான்,செயலாளர் எம்.எல் றிஸ்வான் மற்றும் மியன்டாட் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களான எஸ்.எல்.நிஸார்,ஏ.ஆரிஸ்,எம்.சி.முனாபீர் ஆகியோரும், வர்ணணையாளர்களாக என்.எம்.சஜான், எம்.டி.ஏ.றாஜித் ஆகியோரும்,மேலும் இப்போட்டியின் சிறப்பம்சமாக மர்ஹும் றஜாத் அவர்களின் சகோதர் எப்.எம்.றனீஸ் மியன்டாட் அணிக்கு தலைமை தாங்கியதோடு மற்றுமோரு சகோதரர் எப்.எம். றசாக் அவர்களும் விளையாடியதோடு அன்னாரின் பெயரால் குர்ஆன் அச்சிடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment