கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை- பெரியநீலாவணை பகுதியிலுள்ள வடிகான்கள் குப்பைகள் மற்றும் மண்களினால் அடைக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக நிர்வாக இழுபறிகள் காரணமாக துப்பரவு செய்யப்படாமல் இருந்தமையினால் பாரிய தூர்நாற்றங்கள் வீச தொடங்கியதுடன் மழை நீர் வடிந்தோட முடியாத நிலை உருவாகியிருந்தது.
இது தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல். அஸ்மியை நேரடியாக சந்தித்து சமூக செயற்பாட்டாளர் இசட்.ஏ. நௌஷாட் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கல்முனை மாநகர ஆணையாளரின் பணிப்புக்கு இணங்க மாநகர ஊழியர்கள், சாரதிகள் இணைந்து குறித்த வடிகான்களை இரவு- பகலாக துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.
தெரியப்படுத்தி சில மணித்தியாலயங்களிலையே நடவடிக்கை எடுத்த கல்முனை மாநகர ஆணையாளர், உதவி ஆணையாளர், சுகாதாரப்பிரிவினர், பொறியியல் பிரிவினர் உட்பட மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் மூடிகள் இடப்படாத வடிகான்களுக்கு மூடிகளை இட துரிதகெதியில் நடவடிக்கை எடுக்குமாறும் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment