கிழக்கு மாகாண தனியாள் சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி சம்பியன்





நூருல் ஹுதா உமர்-
ம்மாதம் 24ம் திகதி Pro Knight Chess Academy யால் கிழக்கு மாகாண மாணவர்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட Individual Chess Championship போட்டியில் ஆண்களுக்கான 15வயது பிரிவில் ஐ.கே.எம். ஆகில் கான் முதலாவது இடத்தைப்பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதோடு , எம்.எஸ்.எம். மிஜ்வாத் இரண்டாவது இடத்தையும், எம்.இசட்.எம். ஸனீப் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டதோடு, ஆண்களுக்கான 18வயது பிரிவில் ஐ.எம்.சயான் ஸாஹி முதலாவது இடத்தைப்பெற்று சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாணவர்ளுக்கு பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.சாகிர், விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம். அமீர், சதுரங்க பொறுப்பாசிரியர், பாடசாலையின் உடற்கல்வி பிரிவு மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அனைவருக்கும்
கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர், மற்றும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :