தள்ளாடும் பாலத்தைக் கடந்த ராஜபக்ச குமரர்கள் இளைய தலைமுறையை அடக்க முயல்கின்றனர்.-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.



ற்போதைய அரசாங்கம் மாளிகைகளில் இருந்த வன்னம் இளைஞர்களை அடக்குவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்ற போதிலும் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த மாளிகைகள் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் இரு மையங்களாக மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கம்பளையில் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற அன்றைய தினம்,தான் ஒரு தள்ளாடும் பாலத்தை கடக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தாலும்,ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சில குமரர்கள் தான் இதுவரை தள்ளாடும் பாலத்தை கடந்துள்ளதாகவும், அந்த குமரர்கள் இப்போது,

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அடக்க வேண்டும் என கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

220 இலட்சம் மக்கள் ஆதரவற்ற நிலையிலுள்ள வேளையில்,ராஜபக்சக்களும் அவர்களது தலைமுறையும் தலைநிமிர்ந்துள்ளதாகவும்,

இந்த குமரரின் ஆலோசனையின் பேரில்,இளைஞர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க புனர்வாழ்வுப் பணியகத்தை ஸ்தாபிக்கத் தயாராகி வருவதாகவும்,

எதிர்க்கட்சியாக அதை எதிர்ப்பதாகவும்,தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சக்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதாகவும்,அவ்வாறில்லை என்றால் ராஜபக்சக்களுக்கு நடந்ததே அவருக்கும் நடக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ராஜபக்ச குமரர்கள் சொல்லுவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் தலைமுறையினரை அடக்குமுறைக்குட்படுத்துவதற்குப் பதிலாக,

அரச வன்முறையை அமுல்படுத்துவதற்குப் பதிலாக,தொழிநுட்பப் புரட்சி,ஆங்கில மொழி அறிவு மற்றும் புதிய தொழில்நுட்பம் பற்றிய உயர் புரிதல் மூலம் நாட்டின் இளைய தலைமுறையினர் அறிவு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வலுவூட்டப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கம்,அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக,பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி இளைஞர்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, முன்னுதாரணமான மக்கள் வாழ்க்கையை உருவாக்க நேச கரங்கள் நீட்டப்பட்டு இளைஞர்கள் வலுவூட்டப்பட வேண்டும் எனவும்,இது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தள்ளாடும் பாலத்தை ராஜபக்சக்களும்,ராஜபக்ச குமரர்களும்,ராஜபக்ச அடிமைகளும் கடந்து,தற்போது தமது தேவைக்கேற்பத் தேர்தல் முறையை சீர்திருத்த முயல்கின்றனர் எனவும்,உள்ளூராட்சி வேலைத்திட்ட சட்டக அமைப்பை மாற்றியமைக்க முயல்கிறார்கள் எனவும்,8000 மாகாண சபை உறுப்பினர்களை உருவாக்கிய தற்போதைய ஜனாதிபதி அதனை 4000 ஆகக் குறைக்க முயற்சிக்கின்றார் எனவும்,அவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பதிலாக,இந்த அமைப்பை இன்னும் வினைத்திறனாக மாற்றியமைக்க வேண்டும் எனவும்,25 சதவீத பெண்களின் பங்கேற்பை வழங்குவதற்கு பதிலாக,இளைஞர்களுக்கும் சில குறிப்பிட்டளவு வேட்புமனுக்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இவற்றையெல்லாம் செய்வதற்கு முன்னர்,மக்கள் கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள் சார்,புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வழங்குமாறும்,பல்வேறு ஏமாற்று சூட்சுமங்களை கையாள்வதை விடுத்து,பதவிகளுக்கு ஆட்களை மாற்றாமல்,

சங்கீதக்கதிரைப் போட்டி நடத்தாமல்,நாட்டு மக்கள் கோரும் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கத் தேவையான தேர்தலொன்றை நடத்துமாறும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பளைத் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று(12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :