கல்முனை மாநகர சபையின் புதிய பொதுவசதிகள் குழு உறுப்பினர் தெரிவு



FAROOK SIHAN-
ல்முனை மாநகர சபையின் புதிய பொதுவசதிகள் குழு உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான் தெரிவாகியுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் 55 ஆவது அமர்வு கடந்த புதன்கிழமை(26) மாலை இடம்பெற்ற வேளை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை மாநகர சபையின் பொதுவசதிகள் குழு உறுப்பினராக இருந்து கடந்த 2022.09.15 அன்று அமரத்துவமடைந்த ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த கணபதிப்பிள்ளை புவனேஸ்வரியின் வெற்றிடத்திற்கு இவர் தெரிவானார்.

பொதுவசதிகள் குழு உறுப்பினர் வெற்றிடத்தை சபையில் மாநகர பொதுவசதிகள் குழு தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் சுட்டிக்காட்டி இருந்ததுடன் புதிய உறுப்பினரை தெரிவு செய்வதன் அவசியத்தை குறிப்பிட்டார்.

இதன் போது கல்முனை மாநகர சபையின் புதிய பொதுவசதிகள் குழு உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான் சக கட்சி உறுப்பினரால் பிரேரிக்கப்பட்டதுடன் சபையும் ஏகமனதாக குறித்த பதவிக்கு புதிய உறுப்பினரை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :