கல்முனை சுகாதார பணிமனையில் வாய் சுகாதார மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடல்.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் கல்முனை பிராந்தியத்திலுள்ள வாய் சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிராந்திய மக்களுக்கு வாய் சுகாதார சேவைகளை திறன்பட வழங்கும் நோக்கிலும் வாய் சுகாதார நிபுணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் மருந்துகளின் பற்றாக்குறைகள் தொடர்பிலும் குறித்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளும் பணிப்பாளரினால் வழங்கப்பட்டன. மேலும் வாய் சுகாதார பிரிவினை மேம்படுத்தும் நோக்கில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்புக்களை மேற்கொள்ளவும் புதிய வளங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் பணிப்பாளர் இங்கு தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் பிராந்திய பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பீ அப்துல் வாஜித், பிராந்திய வாய் சுகாதார நிபுணர் எம்.எச்.எம். சரூக், பிராந்திய மருந்தாளர் திருமதி இந்திரகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :