கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஜெயந்தியாய லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் கிரிக்கெட் அணியின் மூன்றாவது சீருடை அறிமுகம் செய்தலும் ஆத்துச்சேனையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கழக நிருவாகிகள், உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், ஜெயந்தியாய பள்ளிவாயல், விவசாயம், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கழகத்தின் உபகரணத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் எம்.அஜ்மீரினால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டதுடன், மூன்றாவது சீருடை அறிமுகம் செய்யப்பட்டதுடன், லெஜன்ட்ஸ் குழுமத்தினால் ஏற்பாட்டில் பகற்போசனமும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment