ஆளுநர் லாகுகல வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்



பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அம்பாறை மாவட்ட லாகுகல பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று (12) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டு குறைபாடுகள் பற்றி கேட்டறிந்தும் கொண்டார்.

வைத்தியசாலையை அன்டியுள்ள பிரதேசத்தில் அதிகமான யானைகளின் நடமாற்றம் இருப்பதால் வைத்தியசாலையைச் சுற்றி யானை வேலி அமைப்பதற்குத் தேவையான பணிகளை உடனடியாக துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

வட கிழக்கு மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்ட காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் பல ஆளுநர்கள் பதவி வகித்தும் இப்பிரதேசத்துக்கு எவ்வித விஜயத்தினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. ஆனால் ஒரு பெண் ஆளுநராக பதவியெற்ற இந்த ஆளுநர் குறித்த வைத்தியசாலைக்கு
விஜயம் செய்து அம்மக்களின் பிரச்சினைகளையும், அரச நிறுவனங்களுக்குத் தேவையான விடயங்களையும் நேரடியாக பார்வையிட்டு, அதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தமையும் இதுவே
முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயதத்தின்போது, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்
சாமர நிலங்க ஆகியோர் கலந்து பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :