சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் அலுவலகத்தின் சுற்றுமதில் அண்மையில் காட்டு யானையின் தாக்கத்திற்குள்ளாகி சேதமடைந்த நிலையில் அம்மதில் தற்போது மீண்டும் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராமத்திற்குள் தொடர்ச்சியாக உள் நுழையும் காட்டு யானைகள் அங்குள்ள மரங்கள் , பயிர்கள் , குடியிருப்புகள் என்பவற்றை சேதப்படுத்தி செல்லும் போது சாய்ந்தமருது விவசாய விஸ்தரிப்பு நிலையத்தின் மதிலையும் பதம்பார்த்துச் செல்லுவது வழமையானதொன்றாகும்.
இதனால் தற்போது மதிலுக்கு வெளிப்புறமாக மின்சார வேலி ( யானை வேலி ) அமைக்கப்பட்டுள்ளதனால் காட்டு யானைகளின் தொல்லை சற்று குறைந்துள்ளதாக சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment