கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமையும் நாளை மறுநாள் வியாழக்கிழமையும்
Bio System Technology
Engineering technology
ஆகிய பாடநெறிகளை தொடரும் உயர்தர மாணவர்களுக்கான செயன்முறை முகாம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது.
கல்முனை கல்வி மாவட்டத்தில் உள்ள கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம் முகாமிற்கு 2022 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 8 மணிக்கு தயாராக வருமாறு சம்மாந்துறை வலய விஞ்ஞான பாட இணைப்பாளர் ரி.எல்.றயிஸ்டீன் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி திணைக்கள தொழில்நுட்ப பாட உதவி கல்வி பணிப்பாளர் ஈஸா.ஸஹீட் வளவாளராக கலந்து கொள்வார்.
0 comments :
Post a Comment