சிறந்த ஊடக நெறிமுறைகளை உருவாக்கி போலியான செய்திகளை இல்லாதொழிப்பது தொடர்பில் ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் சிறகின் மொழி இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு பலான்கொடை கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியில் வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் கே.ஷண்முகவேல் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை ஊடகப் பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ. எப் இர்பானாவின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இச் செயலமர்வில் தரம் 06 தொடக்கம் 12 வரையான பாடசாலை ஊடகப் பிரிவை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச ஊடக செயலமர்வு ஸ்கை தமிழ் பிராந்திய ஒருங்கிணைப்பாளரும் துணிந்தெழு சஞ்சிகையின் இணை ஆசிரியருமான ஷிஹானா நௌபர் இனால் நடாத்தி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment