அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறிந்த கலந்துரையாடல்



எம்.எம்.ஜபீர்-
லக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் (LDSP) கீழ் சம்மாந்துறையில் அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறிந்த கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது உள்ளூர் பொருளாதார மேம்பாடு, உணவு பாதுகாப்பு, உள்ளூராட்சி சபைகளின் சேவைகளை மேம்படுத்தல் போன்ற விடயங்களை மையமாகக் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் , பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தினை தயாரிப்பதற்கான வழிகாட்டல் பயிற்சியினை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான என்.எம்.சாஹிர், திருமதி எம்.வரக்குணராகவன், ஐ.பஸ்மிலா ஆகியோர் முன்னெடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :