உலக நோயாளர் பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று (19)உலக நோயாளர் பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்தவருட நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தின் குறிக்கோள்களையும் இலக்குகளையும் நோக்காக கொண்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதி வைத்திய அதிகாரிகளான டாக்டர் ஜே.மதன், டாக்டர் எஸ் .ராஜேந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து "மெடிகேஷன் சேஃப்டி" என்ற தொனிப் பொருளில் கருத்துரைகளை வைத்திய நிபுணர்களான என். உதயகுமார் டாக்டர் எம்.சமீம் டாக்டர் முஸ்தபா இக்ரம் டாக்டர் எஸ் எம்.ரொசாந்த் டாக்டர் எஸ் .எம் .ரசீன் மொஹமட் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிகளை சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் எஸ்.சிறிகரன் தொகுத்து வழங்கினார்
0 comments :
Post a Comment