சம்மாந்துறையில் "மீலாத் வசந்தம்" சிறப்பு நிகழ்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
னிதநேய நற்பணிப் பேரவை, சம்மாந்துறை - ஸ்ரீலங்கா இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றம்

ஆகியன ஏற்பாடு செய்துள்ள "மீலாத் வசந்தம்" சிறப்பு நிகழ்வு நாளை (09) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 மணி முதல் சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் மைதான திறந்த வெளியரங்கில் இடம் பெறவுள்ளது.

மனித நேய நற்பணிப் பேரவையின் ஆளுநர் சபை உறுப்பினரும் பிரதான ஆலோசகருமான, இராஜாங்க அமைச்சின் ஓய்வு நிலை செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர் (நளீமி) மற்றும் தேசிய, சர்வதேச சமுகநல செயற்பாட்டாளரும் ஜே.ஜே. பவுண்டேஷன் பணிப்பாளருமான கலாநிதி ஐ.வை.எம்.ஹனிப் ஆகியோர் முன்னிலையில், மனிதநேய நற்பணிப் பேரவை மற்றும் இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம் ஆகியவற்றின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஸ்தாபகத் தலைவருமான மனிதநேயன் இர்ஷாத் ஏ.காதர் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், சிறப்பு சொற்பொழிவு, சிறப்புக் கவியரங்கம். இஸ்லாமிய கீதம் உட்பட மேலும் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாவலர் ஈழமேகம் பக்கீர் தம்பி நினைவரங்கில் இடம்பெறும் சிறப்புக் கவியரங்கு வானொலி, தொலைக்காட்சி மற்றும் மேடைக் கவியரங்கின் பிரபல தலைவர் தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறவுள்ளதோடு, இதில் கவிதை பாடும் அரசியல் பிரமுகர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத், தமிழ் - முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம்.ஏ.றஸ்ஸாக் (ஜவாத்), தேசிய
காங்கிரஸின் கொள்கை மற்றும் சட்ட விவகார ஆலோசகர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா, இவர்களுடன் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.தாஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல பேச்சாளர் சமூக ஜோதி எம்.ஏ.றபீக் கலந்து கொள்கிறார்.

இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீபாவின் எதிரொலி மருதமுனைக் கமாலின் இஸ்லாமிய கீதங்களும் இந்நிகழ்வில் இடம் பெறவுள்ளதோடு, மற்றும் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் எவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.






ReplyForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :