அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி பாத்திமா ஜஸ்னா வலீத் கிழக்கு மாகாண மட்ட பேச்சுப் போட்டியில் முதலாம் இடபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை(02-10-2022)மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியின் போதே இவர் தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாம் ஆண்டுக்கான சமூக விஞ்ஞான வினா விடைப் போட்டியில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பொற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவர் மருதமுனையைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத். அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறின் தாஜ் தம்பதியின் புதல்வியாவார்.இம்மாணவி தேசிய மட்டத்திற்குத் தெரிவானதையிட்டு பாடசாலை அதிபர் ஐ.உபைதுல்லா மற்றும் பாடசாலை சமூகமும் பாராட்டையும். வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment