மட்டக்களப்பு கல்லடி ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் நான்கு வருட கால ஜீவ சேவையை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புவதை முன்னிட்டு நேற்று முன்தினம் (15) சனிக்கிழமை பிரியாவிடை வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
அவரது அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி வழியனுப்பும் பிரியாவிடை வைபவம் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல சுவாமி விஞ்ஞானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.
இ.கி.மிஷன் ஆர்வலர்கள், சிவானந்தா பழைய மாணவர்கள், இல்ல பழைய மாணவர்கள் இணைந்து அந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்தனர்.
நிகழ்வில் இ.கி.மிஷனை இலங்கையில் வியாபித்த உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவில் இருந்து செல்லும் மிஷன் பழைய மாணவர்கள் அபிமானிகள் மற்றும் இகிமிஷன் சார்ந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியா திரும்பும் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் புதிய பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுர்ர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா உப வேந்தர் வ.கனகசிங்கம் உள்ளிட்ட 17பிரமுகர்கள் அவரது சேவையை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்.
அம்பாறை மாவட்டம் சார்பில் இ.கி.மிசன் அபிமானிகளான வி.ரி.சகாதேவராஜா த.கயிலாயபிள்ளை கண.இராஜரெத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜிற்கு பலரும் நினைவுச் சின்னங்கள் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இறுதியில் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் ஆக ஐந்து நிமிட ஏற்புரை வழங்கினார்.
0 comments :
Post a Comment