வானம் தெரியும் நிலையில் ஓட்டமாவடி பொதுநூலக கட்டடம் சேதமடைந்து காணப்படுகிறது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள ஓட்டமாவடி பொதுநூலகக் கட்டடமே இவ்வாறு மிக நீண்ட காலமாக காட்சியளிக்கிறது.
கூரைகள் உடைந்தும் கதவுகள் சேதமடைந்த நிலையிலும் காணப்படும் இக் கட்டடத் தொகுதி புறாக்களின் வசிப்பிடமாக மாறி வருகிறது.
தாய், சேய் நிலையம் அமைந்துள்ள இக் கட்டடத் தொகுதிக்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்ளை எதிர்நோக்குகின்றனர்.
அத்துடன், மழை காலங்களில் கூரைகள் வழியாக கட்டடத்துக்குள் மழைநீர் தேங்கி நின்று கட்டடம் இன்னும் பாரிய சேதங்கள் ஏற்படும் நிலையும் காணப்படுகிறது.
எனவே, இதனை பிரதேச சபை நிர்வாகத்தினர் கவனமெடுத்து புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment