கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் மோட்டார் சைக்கிளில் சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் தலைக்கவசம் இன்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களை புன்னைக்குடா வீதியில் வசிக்கும் ஒரு நபர் அவர்களை நிறுத்தி இது இலங்கை மோட்டார் வாகன சட்டத்தின் 214(1),(அ) பிரிவை மீறிய தண்டனைக்குரிய குற்றம் என்பதனை மிகவும் கண்டிப்புடன் சுட்டிக்காட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்த முன்மாதிரியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி சைக்கிள் ஓட்ட அனுமதித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடிய இளைஞர்கள் விடயத்தில் சமூக பொறுப்புடன் நடந்தது கொண்டால் எமது ஊரில் ஏற்படுகின்ற பல உயிராபத்திலிருந்து எமது இளம் சமூகத்தினரை பாதுகாக்க முடியும். மேலும் குற்றங்களை பார்த்துக் கொண்டு இருப்பது அதற்கு நாமும் அங்கீகாரம் வழங்குவது போன்றதாகும்.
(கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் ஏறாவூரில் ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது )
0 comments :
Post a Comment