கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு ஸஹிரியன் பழைய நண்பர்கள் அமைப்பினால் (ZOFA )காலணிகள் வழங்கிவைக்கப்பட்டது.
ஸஹிரியன் பழைய நண்பர்கள் (ZOFA)அமைப்பினால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கல்முனை ஸாஹிறா கல்லூரியில் நடாத்தப்படும் ஸஹிரியன் பிரிமியர் லீக்கின் - ZPL கிரிக்கட் தொடரின் இரண்டாம் சுற்று தொடருக்கான “செருப்புகளற்ற ஸாஹிறா” (SlipperFreeZahira ) என்ற தொனிப்பொருளின் ஆரம்ப நிகழ்வு கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இதற்கமைய முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கான பாடசாலை காலணிகள் கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களிடம் அவ்வமைப்பின் பணிப்பாளர்களால் கையளித்து வைக்கப்பட்டது.
இதேவேளை ஸஹிரியன் பிரிமியர் லீக்கின் - ZPL கிரிக்கட் தொடர் போட்டிகள் (season-02) எதிர்வரும் ஒக்டோபர்( 21-24)வரை கல்முனை ஸாஹிறா கல்லூரி மைதானத்தில் இடம்பெற ஏற்ப்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment