இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தக கண்காட்சியும், விற்பனையும் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார பிராந்திய அலுவலகத்தில் நேற்று முன்தினம் ( 11) ஆரம்பமானது.
இக் கண்காட்சியை கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர்.
இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜீயின் நெறிப்படுத்தலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சி எதிர்வரும்
14.10.2022 ( வெள்ளி ) வரை நடைபெறவுள்ளது.
0 comments :
Post a Comment