ஜனாதிபதி பிரதமர் பதவிகளுக்காக இனவாத கும்பலிடம் சரணடைந்து மக்களுக்கு துரோகம் செய்யவில்லை.-எதிர்க்கட்சித் தலைவர் சஜித்



ப்போது தான் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டிருந்தால் மொட்டுவின் பாதுகாவலராக மாற வேண்டியிருந்திருக்கும் எனவும்,இனவாத, மதவாத கும்பலுடன் இணைய வேண்டியிருந்திருக்கும் எனவும்,இனவாதி ஒருவரின் முன்னால் சென்று சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவ்வாறானதொரு விடயத்திற்கு தான் ஒருபோதும் தயாராகவில்லை எனவும் தெரிவித்தார்.

எதையும் விட தனது சுயமரியாதையை தான் அதிகம் மதிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,பதவிகளுக்காக தனது சுயமரியாதையைக் காட்டிக் கொடுக்காத பயணத்தை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியா ஹட்டன் பிரதேசத்தில் இடம் பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இன்று(30) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உப தலைவரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்திறப்பு விழாவில், கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரகமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்த 6 குடும்பங்களுக்குத் தேவையான நிதியுதவி வழங்கும் நிகழ்வும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.

சாம்பலில் இருந்து எழ முயற்சிப்பவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவுகளால் முழு நாடும் வக்குரோத்தடைந்தாலும்,குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை முற்றாகவே சரிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த புரிதலுடன் இருந்தார் என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்,அவர்களுக்கு குடியுரிமை வழங்குதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் எனவும் தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் வாழும் மக்களை எப்பொழுதும் தொழிலாளிகளாகவே வைத்திருக்க சிலர் விரும்புவதாக தெரிவித்த

எதிர்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அதை முற்றிலும் மாற்றுவதாகவும், அவர்களுக்கு மிக சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடிமைக் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அன்றும் இன்றும் தோட்டங்களில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கூறுவது ஒரு ஏற்பாட்டுடனையே எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :