மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய், விவசாய நடவடிக்கைகக்கு தேவையான டீசலை உடனடியாக வழங்குங்கள். - இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்!



பைஷல் இஸ்மாயில் -
மிக அதிகமான மீனவர்கள் இருக்கின்ற மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கின்றது. தற்போது நாடு இருக்கின்ற நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள் தங்களின் கடற்தொழிலை செய்வதற்குக்கூட மண்ணெண்ணெய் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் தொழிலை செய்வதற்குத் தேவையான மண்ணெண்ணெய்யை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (5) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இந்த வேண்டுகோளை அரசாங்கத்திடம் விடுத்தார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், குறிப்பாக கிண்ணியா பிரதேசத்திற்கு சுமார் 260 க்கு மேற்பட்டு OFRP படகுகளுக்கும், 40 க்கு மேற்பட்ட சுருக்குவலை படகுகளுக்கும் அனுமதி கிடைப்பெற்று மீன்பிடி நடடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுருக்குவலை படகுக்கு மாத்திரம் நாளொன்றிற்கு 4800 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. ஏனைய படகுகள் மற்றும் கடற்தொழிற்பாடுகளுக்கு மொத்தமாக நாளொன்றிற்கு 12000 லீற்றர் தொடக்கம் 13000 லீற்றர் தேவைப்படுகின்றது.
இந்நிலையில் சுமார் ஒரு மாதமாக மண்ணெண்ணெய் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இறுதியாக செப்டம்பர் 10 ஆம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதாகவும், அதன் பிற்பாடு தற்போது வரை வழங்கப்படாததால் மக்கள் அனைவரும் பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.

எனினும், தற்போது கறுப்புச் சந்தையில் மண்ணெண்ணெய் ரூபா 800.00 முதல் 1200.00 வரை விற்கப்படுகிறது. கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்கு மண்ணெண்ணெய் எவ்வாறு கிடைக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

கிழக்கு மாகாணத்தில் டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள இயந்திரங்களை பயன்படுத்த முடியாமல் இருப்பதால், மீனவர்களைப்போல் விவசாயிகளும் பாதிக்கக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடயத்தையும் கருத்திற்கொண்டு அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :