குச்சவெளி பிரதேசத்தை பாதுகாக்க அனைவரும் இணையவேண்டும்; தவிசாளர் முபாறக் வேண்டுகோள்!



பைஷல் இஸ்மாயில் -
ருவமழையால் பாதிக்கப்படும் புல்மோட்டை அறபாத்நகர், முதலாம் வட்டாரம், நான்காம் வட்டாரம் மற்றும் இக்பால் நகர் போன்ற பகுதிகள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், இதனை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும் என்று குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.
குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் அனர்த்த முகாமைத்துவக் கூட்டம் செயலக கலாச்சார மண்டபத்தில் (21) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் பெய்துவரும் பருவமழை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை நாம் அறிகிறோம். அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் இருந்து எமது பிரதேசம் பாதுக்கப்பட வேண்டும்.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமே எடுக்க வேண்டும். அதன் ஆரம்ப கட்டமாக பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து அதற்கு ஒரு குழுவினர் நியமிக்கப்பட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையினை முன்னெடுப்பது அவசியமாகும் என்று தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
வடிகால்கள் துப்பரவு செய்தல், மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் சிரமதானப் பணியினை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுதல் போன்ற விடயங்களை காலதாமதமின்றி செய்கின்ற அதேவேளை, பொதுமக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை கட்டாயம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ள வேண்டுமென தவிசாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, புல்மோட்டை கொக்குளாய் முகத்துவாரம் ஊடாக முல்லைத்தீவுக்கு இயங்கும் படகுச் சேவையை மிகுந்த அவதானத்துடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடலுக்குச் செல்லும் மீனவர்களும் மிக அவதானமாக தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும். இதில் ஈடுபடுபவர்களுக்குரிய அறிவுறுத்தல்களை வழங்குவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான குழுவினர் எமது பிரதேசத்தை பாதுகாக்க எந்நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், குச்சவெளி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், முப்படைகளின் அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :