கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் காரைதீவு விபுலானந்தா சாதனை!



காரைதீவு சகா-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது என்று கல்லூரி அதிபர் மயில்வாகனம் சுந்தரராஜன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகள் கடந்த(25) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் ,கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆக அம்பாறை மாவட்டம் சார்பில் நான்கு அணிகள் மாத்திரமே கலந்து கொண்டன.

இறுதிப்போட்டியில் காரைதீவு விபுலானந்தா அணியும் ,அம்பாறை டிஎஸ்.சேனநாயக்க அணியும் மோதின.

இப்போட்டிகளில் 4-1 என்ற ரீதியில் முதலிடத்தை அம்பாறை டி.ஸ். சேனநாயக்கா கல்லுார அணியினரும் ,இரண்டாம் இடத்தை காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு முதல் போட்டியில் றன்னஸ் அப் சாதனையை நிகழ்த்திய எஸ்.சுஜாந்த் தலைமையிலான விபுலானந்தா அணியை தினமும் பயிற்றுவித்த காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணியினருக்கும், என்னோடு தோளோடு தோள் நின்று அணியை நெறிப்படுத்திய பயிற்றுவிப்பாளர்களான சுலக்ஸன் லோகதாஸ் ஆகியோருக்கும், வழிப்படுத்திய அதிபருக்கும் நன்றி கூறுவதாக கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயநாதன் சோபிதாஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :