நூருள் ஹுதா உமர்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்குரிய வைத்தியர்கள் விடுதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் சீ எம் மாஹிர், அன்னமலை பிரதேச வைத்திய சாலையின் அபிவிருத்தி குழுவினர், பிராந்திய மருந்தாளர் திருமதி இந்திரகுமார், சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் குழுவினரும் PSSP செற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஏனைய சேவைகளுக்கான கட்டிட தொகுதியை பார்வையிட்டதுடன் அதன் மீளாய்வு பற்றியும் கேட்டறிந்து கொண்டனர்.
குறித்த குழுவினருடன் கலந்தாலோசனையில் ஈடுபட்ட பணிப்பாளர் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு குறித்த வைத்தியசாலைக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் பணிப்பாளரின் பாரபட்சமின்றிய சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் பிரதிப் பணிப்பாளர் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி மீது கொண்டுள்ள ஆர்வத்தையையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.
0 comments :
Post a Comment