சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை (ஓக்டோம்பர் 17) முன்னிட்டு நாடலாவிய ரீதியில் பல்வேரு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலகம் தோரும் இடம் பெற்றது.
இதன் அடிப்படையில் இன்று 17.10.2022 ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டமும் சௌபாக்கியா வீஷேட வீடமைப்புத்திட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று திங்கள் கிழமை இடம் பெற்றது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா கலந்து கொண்டதுடன் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், கிராம சேவை அதிகாரிகள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சௌபாக்கியா வீஷேட வீடமைப்புத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு லட்சத்தி இருபத்தையாயிரம் ரூபா நிதியளிப்பில் பயனாளியின் ஐந்து லட்சம் ரூபா நிதி பங்களிப்புடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம். சாஜஹான் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment