கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்திய மாகாண மட்டசமூக விஞ்ஞான போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவான சம்மாந்துறை மஜீட்புர மகா வித்தியாலய மாணவன் கே.எம்.அம்சாத் கௌரிக்கப்பட்டார்.
சம்மாந்துறை வரையத்தில் மிகவும் பின்தங்கிய தனிமைப்படுத்தப்பட்ட கிராமமான மஜீட்புரத்திலுள்ள மகா வித்தியாலயத்தில் தரம் 12-ல் படிக்கும் கே .எம். அன்சாத் என்ற மாணவனே உயர்தரபிரிவிலே முதலிடத்தை பெற்று தேசியமட்டத்துக்கு தெரிவாகி இருக்கின்றார் .
இவரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(18) செவ்வாய்க்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் எம் அமீரின் வழிகாட்டலில் பிரதி கல்வி பணிப்பாளர் ஏஎல்ஏ.மஜீட் தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
மஜீட்புர மகா வித்தியாலய உயர்தர மாணவன் அம்சாத் சம்மாந்துறை வலயத்தில் இருந்து தெரிவான ஒரேயொரு மாணவராவார்.
அவருக்கு மாலை சூட்டி பாராட்டி கௌரவித்தனர்.
நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ரியால் ,சகாதேவராஜா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் சபூர்தம்பி, வலயத்தில் சமுக விஞ்ஞானப்பிரிவுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களான நிசார் , ஈசிபு உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எதிர்வரும் சனிக்கிழமை களுதாவளை மகாவித்தியாலயத்தில் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment