"ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் சிறந்த ஆளுமைகளை உருவாக்கும்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!



ஊடகப்பிரிவு-
சிரியர்களின் வழிகாட்டல்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

"ஒரு சமூகத்தின் ஒழுக்க விழுமியம் மாணவர்களின் வளர்ப்பு நெறியில் தங்கியுள்ளது. மாணவச் சிறார்களின் சிந்தனைகளை நெறிப்படுத்தும் ஆசான்களின் அர்ப்பணிப்புக்களை கௌரவிக்கும் பொறுப்பு கல்விச் சமூகத்துக்கு உண்டு. இதனடிப்படையில்தான் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

சிறந்த இலட்சியங்கள், சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களுக்கு அடிகோலாக அமைவது ஆசிரியர்களின் வழிகாட்டல்கள்தான். இதை, ஆரம்பத்திலிருந்து பயிற்றுவிக்கும் பொறுப்பு ஆசிரியர் சமூகத்திடமே ஒப்படைக்கப்படுகிறது. இவர்களது சேவைகளுக்கு நிகராக எதுவுமில்லை. இந்தச் சேவைகளால்தான் வைத்தியர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பெறுமதியான மனிதவலுக்கள் உருவாகின்றன. இந்த வலுக்களின் அத்திவாரம் ஆசிரியர்கள்தான்.

இவ்வாறு உருவாக்கப்படும் மாணவர்கள் ஒழுக்கமின்றிப் போனால், சமூகத்தால் எந்த நன்மைகளையும் அடைந்துகொள்ள முடியாது. இதற்காகவே, ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கள் காலத்தால் அழியாதுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :