கலப்பின சோள உயர் அடர்த்தி மாதிரி பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் கீழ் சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) அன்று பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின்(மத்திய அரசு) நிலைய பொறுப்பதிகாரி சு.விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதிக்கு பொறுப்பான தொழிநுட்பவியல் உத்தியோகத்தர் வி.நிறூஷன் (TA)ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ சனீரின் வழிகாட்டலில் பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில்(மத்திய அரசு) நடைபெற்றது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கான( 01) சோள விதை இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாலமுனை கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸ்ரப் திகவாவி பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் சமீர பாலமுனை பகுதிக்கு பொறுப்பான தொழில்னுட்பவியல் உத்தியோகத்தர் கே.குகலேந்தினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment