கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பிராந்தியத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல் ஆவணம் நேற்று(10) பணிமனையின் கேட்போர்கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய தொற்று நோய்த்தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பசால் அவர்களின் ஏற்பாட்டில் பூச்சியியல் உத்தியோகத்தர் கே.ஏ ஹமீட் அவர்கள் மற்றும் குழுவினர் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
பொருளாதார முகாமைத்துவம் கருதி மென்பொருள் ஆவணமாக வெளியிடப்பட்ட இப்பிரதிகள் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment