கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் நடாத்திய மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் கிழக்கில் உள்ள 17 கல்வி வலயங்களில் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தை பெற்றுள்ளது .
கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியின் இறுதி நாளில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் கலந்து கொண்டு கேடயங்களை வழங்கினார்.
கிழக்கு மாகாண பாடசாலைமட்ட விளையாட்டு விழாவில்
1-பட்டிருப்பு கல்வி வலயம் -194
2-கந்தளாய் கல்வி வலயம் - 94
3-கல்முனை கல்வி வலயம் - 88
பெற்றுள்ளது.
பாடசாலை ரீதியில்
1- களுதாவளை ம.வி.தே.பா-123
2- கந்தளாய் அக்ரபோதி ம.வி.- 46
3-செட்டிபாளையம் ம.வி - 42
புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைத் தட்டிக்கொண்டன.
0 comments :
Post a Comment