கிழக்கு மாகாணத்தில் காரைதீவில் பிறந்து வடக்கில் தடம் பதித்த உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலை இன்று வடக்கில் திறந்து வைக்கப்பட்டது.
வரலாற்று பெருமை மிகு தருணம் இது.
வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்தவர் ஈழம் தந்த சைவத்தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார்.
அவரது திருவுருவச் சிலை யாழில் முக்கிய நெடுஞ்சாலையான யாழ் - மானிப்பாய் - காரைநகர் வீதியில் யாழ் நுழைவாயலில் அமைக்கப்பட்டது.
கிழக்கின் முதன்மை ஆதீனமான தென் கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகளாரால் இச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment