இவ்வருடம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மீராவோடை உதுமான் வித்தியாலய மாணவன் உசனார் முகம்மது சஜ்ஜாத் மீள் பரிசீலனையின் போது சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.பீ.எம்.முபாறக் தெரிவித்தார்.
இவர், வெளியான பெறுபேற்றின் படி 146 புள்ளிகளைப் பெற்றிருந்தார். இந்நிலையில் குறித்த மாணவன் மீள் பரிசீலனை செய்த போது அதன் பெறுபேறு 147 ஆக மாற்றம் பெற்று மாணவன் சித்தியடைந்துள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு சித்தியடைந்த மாணவன் சஜ்ஜாத்துக்கும் கற்பித்த ஆசிரியர் எம்.எம்.எம்.அஸீஸ் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கிய பெற்றோருக்கும் அதிபர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment