இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்திய நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று வித்தியாரம்பம் சிறப்பாக நடைபெற்றது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார கற்கை நிறுவகத்தின் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையத்தினால் அடிப்படை சான்றிதழ் பயிற்சிகளுக்கான வித்தியாரம்ப நிகழ்வு இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.
பண்ணிசை, பரதநாட்டியம், கதாப்பிரசங்கம் வயலின் ,வீணை, சொற்பொழிவு ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகளுக்கான வித்தியாரம்பம் விபுலானந்த அடிகளாரின் மணி மண்டபத்தில் அந்தந்த வளவாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.
பெருந்திரளான மாணவர்கள் இக்கலைப் பயிற்சி வகுப்புகளில் பயில ஆர்வத்துடன் இணைந்ததைக் காணமுடிந்தது.
இறுதிப்பூசை நிகழ்வுகள் இந்து கலாசார உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.
0 comments :
Post a Comment