சாய்ந்தமருதைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஓமான் நாட்டிலுள்ள விளையாட்டுக் கழகமொன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் கிரிக்கட் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டு ஓமான் பயணமானார்கள்.
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த பல முன்னணி விளையாட்டுக்கழகங்களிலும் , கல்வி கற்ற காலத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி கிரிக்கட் அணியிலும் பங்கேற்று பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்த இவர்கள் பிரதேசமட்டம் , மாவட்ட மட்டம் , மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திலும் கடின பந்து கிறிக்கட் துறையில் பிரகாசித்தவர்களாகும்.
ஜே.எச்.அப்லால் காரியப்பர் , எம்.சஜாத் , எம்.ஏ.எம்.றஸ்பாஸ் ஆகிய மூன்று இளைஞர்களும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
0 comments :
Post a Comment