சமுர்த்தி வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் ஒற்றுமையுடன் செயற்படுவதையிட்டு பெருமிதமடைகிறேன் -அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ்


எம்.என்.எம்.அப்ராஸ்-
முர்த்தி திட்டத்தின் வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் எவ்வாறு ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயற்படுவதையிட்டு மாவட்ட பணிப்பாளர் என்ற வகையில் பெருமிதமடைகிறேன் என அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தின் இஸ்லாமாபாத் பிரிவின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஏற்பாட்டில் "புன்னகை கானும் எமது உலகம்" எனும் தொனிப் பொருளில் சிறுவர் தின நிகழ்வுகள் இஸ்லாமாபாத் சிறுவர் பூங்கா வளாகத்தில்,(கல்முனை) 2022.10.07 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கல்முனைக்குடி வங்கி வலய முகாமையாளர் எம்.புவிராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில், இஸ்லாமாபாத் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.அர்சுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ்,விஷேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அவர்களும்,கெளரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலக தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஏ.சி.எம்.றிசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் உரையாற்றும் போது அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் அவர்கள்,சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன அதில் முக்கியமாக சமூகத்துடன் ஒன்றிணைந்து இன்றியமையாத வேலைத்திட்டங்களையும்,சில விசேட தினங்களை கொண்டாடிவருகின்றோம்

கல்முனை பிரதேச செயலக பிரிவில் சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக குறிப்பாக பிரதேச மக்களின் ஒற்றுமையான ஒருங்கிணைப்பில் ஏற்ப்பாடு செய்யப்பட்ட நிகழ்வினை நேரடியாக கானும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சமுர்த்தி திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் தான் சமுக ஒருங்கிணைப்பாகும்.சமுர்த்தி திட்டத்தின் வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் எவ்வாறு ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயற்படுவதையிட்டு மாவட்ட பணிப்பாளர் என்ற வகையில் பெருமிதமடைகிறேன்.

இவ்வாறான ஒற்றுமையான ஒருங்கிணைப்புடன் நமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்க்கும்,மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.

மேலும் சிறந்த முறையில் சிறுவர் தின நிகழ்வினை எற்பாடு செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.அர்சுதீன் உட்பட எற்ப்பாட்டுக் குழுவினருக்கு நன்றியினை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அதிதிகளாக சமுர்த்தி கருத் திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா சமுர்த்தி மகாசங்க முகாமத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா மருதமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எல்.எம்.நஜீப் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.பைசால் மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவி முகாமையாளர்கள், வங்கி உதவி முகாமையாளர்கள் பிரிவுக்குப் பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள்,பொதுமக்கள்,
அரசியல்வாதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய கலை நிகழ்ச்சியான பொல்லடி வரவேற்புடன் ஆரம்பமான இந் நிகழ்வில் கலை கலாச்சார மற்றும் பாரம்பரிய சிறுவர் விளையாட்டுகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இஸ்லாமாபாத் கிராமத்தின் சிரேஷ்ட பிரஜையான மூதாட்டி ஒருவரும்,தரம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கெளரவிப்பு இடம்பெற்றதுடன்,சிறுவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்களுக்கான கிண்ணம்,சான்றிதழ் வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் என்பன இடம்பெற்றது.

இந்நிகழ்வானது பிரதேச மக்களால் மிகவும் விரும்பத்தக்கதும் பாராட்டுக்குரிய நிகழ்வாகவும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :