இயந்திரத்துடன் படகு மீட்பு-பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு



பாறுக் ஷிஹான்-
யந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று புதன்கிழமை(5)மாலை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த படகானது பாலமுனை கடற் பகுதியில் அநாதரவாக காணப்பட்டதை அடுத்து படகு குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் குறித்த படகு கைவிடப்பட்டுள்ளதை இனம் காண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
சாய்ந்தமருது பொலிஸ் குழுவினர் கரையொதுங்கிய படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் குறித்த படகில் மீனவர்களோ எந்தவித கடற்சாதனங்களோ இருக்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் 10 நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :