ஸ்ரீ லங்கா பென்கிளப் (Srilanka pen club )அமைப்பின் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகத் தலைவி சம்மாந்துறை மஷூறா( ஆசிரியை) தெரிவித்தார்.
தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு சாய்ந்தமருது அல்ஹிலால் ம.வி.யில் நடைபெறவுள்ளது.
இம் மகாநாட்டிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பான முதலாவது கூட்டம் நேற்று முன்தினம் Srilanka pen club தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் சாய்ந்தமருது அல்ஹிலால் ம.வி.யில் இடம்பெற்றது.
மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இதுவரை அறுபத்தைந்து பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும்,பெண்ணிலக்கியயம் சார்ந்த உரைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் களைகட்டவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கூட்டத்திற்கு சம்மாந்துறை நிந்தவூர் அக்கரைப்பற்று சாய்ந்தமருது மருதமுனை அங்கத்தவர்கள் சமூகமளித்திருந்தனர்.
0 comments :
Post a Comment