ஓர் சமூகப்பற்றாளனின் ஆன்மா உறங்கியது.
ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் சகோதரர் றியாழ் அவர்களின் மரணச் செய்தி இன்று அதிகாலை கேள்விப்பட்டு மிக்க கவலையடைந்தனே்.
இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே .ஆக வேண்டும் என்ற இறை வசனத்திற்கேற்ப நாம் அனைவரும் மரணித்தே ஆக வேண்டும்.ஒரு மனிதனின் பிறப்பை நிச்சயிக்க முடியாவிட்டாலும் ,பிறந்து விட்டால் இறப்பு நிச்சயமானதாகும். ஏறாவூர் மண்ணில் சமூகப்பற்றுடன் மிகத்துடிப்புடன் செயலாற்றிய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையக் கூடிய பக்குவமிக்க ஓர் இளைஞனின் இழப்பானது என்னில் மிகுந்த கவலையைத் தோற்றுவித்ததொன்று. அந்த வகையில் சகோதரர் றியாழ் அவர்கள் சமூக வேலைத்திட்டங்களில் தன்னை அர்ப்பணித்து பல தேவையுடைய மக்களை இனங்கண்டு சிரித்த முகத்துடன் சேவைகள் பல செய்து இன்பமடைந்த அந்த நல்லுள்ளம் கொண்டவர்.
சகோதரர் றியாழ் ஹாஜி அவர்கள். ஏறாவூர் நகர சபையின் உறுப்பினரான காலம் தொட்டு அவரைப்பற்றியும் அவரின் பொது நோக்கான செயற்பாடுகள் பற்றியும் நன்கு அறிவேன்.
எவரோடு பழகும் போதும் அன்பாகவும் , பண்பாகவும், கண்ணியமாகவும், நடந்து கொள்ளும் ஒருவராக நான் அவரைக் கண்டுள்ளேன்.
அல்லாஹ் அவருடைய மறுமை வாழ்வை சிறப்பாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கமும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் .அவரின் திடீர் மரணத்தினால் துயருறும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் நலன் விரும்பிகள் அவர் மீது பற்று வைத்துள்ள அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதுடன் நானும் அதில் பங்கு கொள்கின்றேன். எல்லோருக்கும் இறைவனின் நல்லருள் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.
0 comments :
Post a Comment