கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவின் பரிசளிப்பு நிகழ்வு



ஹஸ்பர்-
கிண்ணியா தள வைத்தியசாலையின் உளநலப் பிரிவால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று(15) திருகோணமலை ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

18 வயதிற்கு கீழுள்ள மாணவர்களை மையப்படுத்தி “ மகிழ்ச்சியான தருணம்” மற்றும் “ ஆரோக்கியமான உள்ளத்தால் ஆரோக்கியமான உலகம் படைப்போம்” என்ற தலைப்பில் வரைதல் போட்டி நடாத்தப்பட்டது.

குழந்தைகளிடையே உள ஆரோக்கியம் சம்மந்தமான விழிப்புணர்வை வளர்ப்பதுவே குறித்த இப்போட்டியின் நோக்கமாகும்.

இப்போட்டியில் பங்கு பற்றி முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களிற்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இதனை திருகோணமலை வைத்தியசாலையின் உளநல விசேட வைத்தியர் கயானி சிறிவர்த்தன அவர்களும் பிராந்திய சுகாதார பணிமணையின் உளநலப்பிரிவு பொறுப்பதிகாரியாக கடமைபுரியும் வைத்தியர் சிறீகௌரீஸ்வரன் அவர்களும் நிதி உதவி வழங்கிய ஹன்பல் அவர்களும் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்க “ Ibrahim Eating House” நிறுவனத்தினரும் பிராந்திய சுகாதார பணிமணையின் உளநலப்பிரிவும் பிரதானமாக நிதி உதவிகளை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்தியர் டொக்டர் ஏ.கே.எம்.நஸ்மி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :