சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(3) குறித்த சடலம் கடலில் மிதந்த கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சடலமானது இனங்காணப்படாதிருந்த நிலையில் இன்று காலை பொதுமக்களின் உதவியினை கோரி இருந்தனர்.அத்துடன் ஊடகங்கள் பலவற்றிலும் செய்திகள் பிரசுரமாகி இருந்தன.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியதுடன் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்ற ஒரு பிள்ளையின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஓர் ஆசிரியர் எனவும் இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment