கல்முனை சந்தான்கேணி பொது மைதானம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் பொது மைதானத்தை செப்பனிடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் குறித்த மைதானத்தின் நிலைமை தொடர்பில் ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழக தவிசாளர் ஏ.எம் றியாஸ் மைதானம் தொடர்பில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
இதற்கமைய குறித்த மைதானத்தில் காடுமண்டியிருந்த பகுதிகள் இனங்காணப்பட்டு கனரக(பெக்கோ) வாகனம் மூலம் அகற்றப்பட்டு செப்பனிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழக தவிசாளர் ஏ.எம் றியாஸ் ,கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழக தலைவர் ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன் ,பொதுச்செயலாளர் ஏ.ஜே.சமீம் செப்பநிடப்பட்டு வருகின்ற மைதானத்தை ஸ்தலத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் குறித்த கோரிக்கையினை ஏற்று துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகர முதல்வர் உட்பட கல்முனை மாநகர சபை பொறியியலாளர் எம்.ஜெளஸி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகமானது 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்து செயற்பட்டு வருவதுடன் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக இப்பிராந்தியத்தில் செயற்பட்டு கழகத்தில் பல்லின மக்கள் உள்வாங்கப்பட்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment