சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய புலமையாளர்களை சம்மாந்துறை இஸ்லாமிய வங்கி ஒன்று பாராட்டி கௌரவித்திருக்கின்றது .
சம்மாந்துறை மஸ்ரபுல் இஸ்லாமிய்யா சிக்கன கடன் கூட்டுறவு சங்கம் இவ்வாறு புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்தது.
கல்லூரி அதிபர் திருமதி சத்யா செந்தமிழ்செல்வன் தலைமையில் நேற்று ஆராதனை மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
பிரதம அதிதியாக வலய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ரப், தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜலால்தீன், இஸ்லாமிய வங்கியின் தலைவர், முன்னாள் தவிசாளர் இப்ராஹிம் ,உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, உறுப்பினர்களான ராசிக் ,அமீர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.
கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 130 புள்ளிகளுக்கு மேல் எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம், உண்டியல் ,புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இன ஐக்கியத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் இஸ்லாமிய வங்கிக்கு அங்கு உரையாற்றிய அனைவரும் பாராட்டு தெரிவித்தார்கள்.
இடையிடையே மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.
பிரதி அதிபர் திருமதி அருந்தவவாணி சசிக்குமார் நன்றி உரையாற்றினார்.
0 comments :
Post a Comment