வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கை வருகையின் 125 ஆவது ஆண்டு தொடர்விழாவின் ஓர் அங்கமாக, ராமகிருஷ்ண மிஷன் நிர்வாகத்தின் கீழ் அன்று இயங்கிய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான இறுதி போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் ,இலங்கை ராமகிருஷ்ண மிஷன் என்ற ஆவணப்பட வெளியிட்டு நிகழ்வும் கடந்த சனிக்கிழமை(1) கல்லடி சுவாமி விபுலானந்த மணி மணிமண்டபத்தில் நடைபெற்றது .
கல்லடி ராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ வரவேற்பு வழங்க, கிழக்கு மாகாண மீன்பிடித்துறை பணிப்பாளர் எஸ்.சுதாகரன் 'விவேகானந்தர் மகாத்மியம் "என்ற பாமாலை சூட்டினார்.
சிறப்புரையை கிழக்கு மாகாண கல்வி திணைக்கள ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி. பார்த்திபன் நிகழ்த்த, பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்து சிறப்பித்தார்.
சுவாமி ஆவணப்பட வெளியீடும் இடம்பெற்றது .
சிறப்பு உரையை மட்டக்களப்பு நன்னடத்தை திணைக்கள பொறுப்பாளர் பா. சந்திரகாந்தன் நிகழ்த்த, நன்றி மற்றும் மகிழ்வுரையை இல்ல முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் நிகழ்த்தினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் ஆவணப்பட வெளியீடும் இடம் பெற்றன.
0 comments :
Post a Comment