திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமத்தை சேர்ந்த 75பேருக்கு காணி ஆவணப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு ,திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் (07) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமத்தில் காணிஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மற்றும் பயிர் செய்யும் மக்களுக்கு இவ் காணி ஆவணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது...
இந் நிகழ்வில் , திருக்கோவில் பிரதேச செயலக சிரேஷ்ர நிருவாக உத்தியோத்தர் ரி. மோகனராஜன், காணி உத்தியோகத்தர்களான பி.கோவிந்தசாமி, திருமதி.ரி.லோஜினி, திருக்கோவில் பிரதேச செயலக நிருவாகபிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோத்தர் ரி.சசிந்திரன், திருக்கோவில் பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவு உத்தியோத்தர்கள் ,கிராம சேவையாளர்கள் கிராம சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டு இவ் தெரிவு செயப்பட்ட மக்களுக்கு காணி ஆவணப்பத்திரங்கள் வழங்கி வைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் காணி ஆவணம் வழங்கும் திட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகம் முன்னணியில் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment