சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமாகிய பேத்தாழை விவேகானந்தா சமூக நிலையமும் பேத்தாழை பொது நூலகமும் இணைந்து முன்பள்ளிச் சிறார்களுக்கான கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.
சனசமூக நிலையத்தின் தலைவர் கி.மருதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேத்தாழையின் பாரதியார் முன்பள்ளி, கலைமகள் முன்பள்ளி, கருங்காலிச்சோலை விபுலானந்தர் முன்பள்ளி ஆகியவற்றின் மாணவர்களை ஒன்றிணைத்து கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் உள்ளடங்கியதாக கருங்காலிச்சோலை முன்பள்ளியில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், சனசமூக உத்தியோகத்தர் ஜனாப்.அ.ஹாரூன், பேத்தாழைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.த.தயாளகுமார், சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.லோ.யோகராசா, கல்குடா பொலிஸ் நிலையத்தினுடைய உத்தியோகத்தர் மற்றும் உலக தரிசனம் நிறுவனத்தின் பிரதிநிதி என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த சிறுவர் தின நிகழ்வில் பங்குபற்றிய சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், பேத்தாழை பொது நூலகத்தினை தொடர்ச்சியாக பாவித்து வரும் சிரேஷ்ட வாசகர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment