இறக்காமம் லீடர் ஜூனியர் பாடசாலையில் சர்வதேச ஆசியர் தின நிகழ்வு அதிபர் நிஹால் உமறுகத்தா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் கௌரவ அதிதிகளாக ஆசிரியர் ஆலோசகர்களான ஏ.எம். கியாஸ், யூ.எல்.ஜெபீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
ஆசியர்களுக்கான அன்பளிப்பு பொருட்களுக்கான அனுசரணையை ஏ.ஏ. முகம்மது சஜ்ரீன் அவர்களாலும் மாணவர்களுக்கான விருந்துபசாரம் ஏம்.எஸ்.றிஸ்மி, எம்.ஏ.எம்.இத்ரீஸ் ,ஏ.எம்..அன்சார் ஹாஜியார் ஆகியோர் அனுசரணை வழங்கி நிகழ்வை கௌரவித்தனர்.
மாணவர்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் மேடையேறின.
0 comments :
Post a Comment