அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(25) சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனின் பரிந்துரையின் பேரில் கடந்த காலங்களில் 'கிறீன் பீல்ட்' கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் தலைவராக செயற்பட்ட அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலீலுர் ரஹுமான் மேற்படி பதவிக்கு நியமிக்கப்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனது சிறு பராயம் முதல் பல்வேறு பரிமாணங்களில் தலைமை பொறுப்புகளை எற்று இயங்கிவந்த நேர்மையும் திறமையும் கொண்ட பிரபல சமூக அரசியல் செயற்பாட்டாளர் என்பதுடன் மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் முஸ்லிம் தேசிய அரசியல் பாசறையில் வளர்ந்தவர் என்பதும் முன்னாள் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவரது நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால்னால் வெளியிடபட்டிருந்ததுடன் புதிய உறுப்பினராக பதவியேற்ற இவர் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்று(26) கல்முனை மாநகர சபை அமர்வு இடம்பெறவுள்ளதுடன் கன்னி உரையையும் மேற்கொள்ளவுள்ளார்.
0 comments :
Post a Comment