பொன்விழாவினை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயம் "சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்" எனும் தொனிப் பொருளிலான இவ்வருட சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகளை இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்திருந்தது. இதன் இரண்டாம் கட்ட நிகழ்வாக சிறுவர் தின கலை நிகழ்வுகள் 03.10.2022 ஆந் திகதி திங்கட்கிழமை ஏற்பாடு செய்யபட்டிருந்தது. பாடசாலை அதிபர் DM. உவைஸ் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில் கோரளைப்பற்று மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் SM. அல் அமீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் U. றசீட்(JP) அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இவர்களோடு பாடசாலை பிரதி அதிபர்களான VTM. ஜனூன், ALM. சில்மி ஆகியோரும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்..
மாணவர்களின் ஜனரஞ்சகமான பல கலை நிழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர் செல்வங்கள் அனைவருக்கும் சிறுவர் தின அன்பளிப்புகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment